
வடமொழியில் துளசிதாசர் “ராம சரித மானஸ” என்னும் தன்னுடைய ராமாயண நூலை கி.பி. 1513-ம் ஆண்டில் இயற்றினார். மலையாள மொழியில் பதினான்காம் நூற்றாண்டில் ராமாயணம் எழுத்தச்சனால் எழுதப் பட்டது. தெலுங்கில் ரங்கநாதரின் தவிபாதி ராமாயணம், திக்கண்ணா என்பவரின் நிர்லகதா ராமாயணம், பாஸ்கர ராமாயணம் போன்றவை எழுதப் பட்டது. ஒரிய மொழியில் பதினாறாம் நூற்றாண்டில் பலராம்தாஸ் என்பவரால் ராமாயணம் எழுதப் பட்டது. அஸ்ஸாமிய மொழியில் மாதங்குளி என்பவரும், குஜராத்தியில் அஜாஷ்ட மல்லன் ஹரிதாஸ், துர்க்காதாஸ் ஆகியோரும் ராமாயணம் எழுதினார்கள். மராட்டி மொழியில் ஏகநாதரின் பாவிர்த்த ரமாயணம் கிருஷ்ண தாஸ் முத்கல் யுத்தகாண்டம், முத்தேவரின் ராமாயணம், சமர்த்த ராமதாஸரின் லகு ராமாயணம் போன்றவை பதினேழாம் நூற்றாண்டில் எழுதப் பட்டவை.
வங்க மொழியில் கிருதிலாஸ் ஓஜாஸ்ரீராம பாதாஞ்சலி என்ற பெயரிலும் உருது மொழியில் ராமாயண குஷ்டார் என்ற பெயரில் முன்ஷி ஜெகந்நாத குஷ்டார் என்பவரும் எழுதினார்கள். நேபாள மொழியில் பானுபட் என்பவர் அத்யாத்ம ராமாயணம் எழுதினார். ராமரின் புகழ் இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும், முக்கியமாய்க்கீழை நாடுகளில் பரவி இருக்கின்றது. தாய்லாந்து நாட்டின் அரசர்கள் தங்களை “ராமா” என அழைத்துக் கொள்ளுகின்றனர். தற்சமயம் இருந்த அரசர் பெயர் “பூமிபால் அதுல்யதேஜ் 9-வது ராமா” ஆவார்.

பினாங்கில் உள்ள ஒரு மசூதியில் உள்ள பெயர்ப்பலகையில் “இந்த மசூதி 1974-ம் ஆண்டு ஸ்ரீ ராம பாதுகையின் ஆணைப்படி கட்டப்பட்டது” எனப் பொறித்திருப்பதாய்ச் சொல்லுகின்றார்கள். மலேசிய அதிபரோ தாம் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும்போது, “ஸ்ரீராமதூளி மேல் ஆணையாக” என்று சொல்லித் தான் பதவி ஏற்பார் எனச் சொல்கின்றனர். மலேசியப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கி.பி. 13-ம் நூற்றாண்டில் இயற்றப் பட்ட “ஹிகாய்த் செரிராமா” என்ற மலாய் மொழி ராமாயணம் பாடமாகப் பயிற்றுவிக்கப் படுகின்றது. மலேசிய சுலதானை, “ ராஜ பரமேஸ்வர” என்றும் ராணியை “ராஜ பரமேஸ்வரி” என்றும் ராஜகுமாரனை “லக்ஷ்மண” என்றும் அழைக்கின்றனர்.
தொடர்ந்து எழுத முடியாமல் நடுவில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறேன்.
No comments:
Post a Comment