****************************************************************************************
அடுத்த ஸ்லோகம் இது: ராமன் முதன்முதல் தன் வீரத்தைக் காட்டியது விஸ்வாமித்திரர் அழைத்துச் சென்றபோதே. அப்போதில் இருந்து கடைசியாக ராவணன் வதம் வரையிலும் ஸ்ரீராமன் தன் கடமையான தர்மத்தில் இருந்து தவறவே இல்லை.

துஷ்டர்களை அழிப்பதையும், நல்லவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பதையுமே தன் கடமையாகக் கொண்டிருந்தான். ஸ்லோகத்தின் அர்த்தம் இது அல்ல.
"ஆர்த்தானாம் ஆர்த்திஹந்தாரம் பீதானாம் பீதநாஸனம்!
த்விஷதாம் கால்தண்டம் தம் ராமசந்த்ரம் நமாம் யஹம்!!"
பீடைகள்=துன்பங்களினால் பாதிக்கப் பட்டவர்களின் துன்பங்களையும் பயந்தவர்களின் பயத்தையும், சத்ருக்களால் துன்பம் அடைவோருக்கு உதவி சத்ருக்களை நாசம் செய்து காலதண்டம் போல் விளங்குபவருமான ஸ்ரீராமசந்த்ரமூர்த்தியை வணங்குகின்றேன்.
ஸந்நத்த: கவசீ கட்கி சாபபாணதரோ யுவா!
கச்சன் மாகம்ரதோ நித்யம் ராம: பாது ஸ ல்க்ஷ்மண!!
யெளவனமாய்க் காட்சி தருபவரும், இளவல் ஆன லக்ஷ்மணனுடன் எப்போதும் இணை பிரியாது இருப்பவரும், கவசம் அணிந்து, வில், அம்பு இவற்றை எப்போதும் தரித்தவரும் ஆன ஸ்ரீராமசந்த்ர மூர்த்தி என்னை எப்போதும் காக்கவேண்டும்.நம: கோதண்ட ஹஸ்தாய ஸந்தீக்ருத சராய ச!
கண்டிதாகில தைத்யாய ராமாயா பந்நிவாரிணே:"
கோதண்டம் என்னும் காதளவு நீண்ட நாணை உடைய வில்லைத் தரித்துக் கொண்டு அம்பை அதில் ஏற்றி எப்போதும் தயார் நிலையில் உள்ள பாணத்தை உடையவரும், எல்லா அசுரர்களையும் துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் செய்தவரும் ஆன ஸ்ரீராமசந்த்ர மூர்த்திக்கு நமஸ்காரங்கள்.டிஸ்கி: அர்த்தம் நானாக ஒரு மாதிரியாய் எழுதியது. வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் கொடுக்கலை. பொதுவான அர்த்தமே கொடுத்திருக்கேன்.
No comments:
Post a Comment