மநோஜவம் மாருத துல்யவேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வாநரயூத முக்யம் ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி
அஞ்சனாதேவிக்கு வாயுவின் உதவியால் சிவாம்சமாய் ஆஞ்சநேயர் பிறந்தார். அவர் பிறக்கும் முன்னரே தேவர்களின் ஆசிகளால் கர்ப்பத்திலேயே பூணூல், கோவணம் மற்றும் குண்டலங்களைக் கேட்டுப் பெற்றுக் கொண்டதாய்ச் சொல்லுவார்கள். அஞ்சனை பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருக்கும்போது உள்ளே இருந்த ஆஞ்சநேயர் உருவம் பெரியதாக இருந்ததால் பிரசம் நடக்கக் கஷ்டப் பட்டது. அஞ்சனையோ வலியால் துடித்தாள். கேசரிக்கோ என்ன செய்வது எனப் புரியவில்லை. அஞ்சனைக்கு வரமளித்த ஈசனையும், அந்த வரத்தை நிறைவேற்றிய வாயுவையும் இருவருமே துதித்தனர். வாயு பகவான் மும்மூர்த்திகளையும் அண்டிப் பிரார்த்திக்க அவர்கள் விஸ்வகர்மாவை அனுப்பினார்களாம். விஸ்வகர்மா பிரசவவலியோடு துடித்துக் கொண்டிருந்த அஞ்சனையின் வயிற்றில் இருந்த குழந்தையிடம் தாய்க்குச் சிரமம் கொடுக்காமல் வெளியே வரும்படியும், பராக்கிரமசாலியாக விளங்கப் போகும் அந்தக் குழந்தை பிறக்கச் சரியான தருணம் வந்துவிட்டதாகவும், தானே வெளியே வரும்படியும் சொன்னாராம். அந்தக் குழந்தையோ விஸ்வகர்மாவைப் பார்த்து, தன் பருமனான உடல்காரணமாய் வெளியே வரமுடியவில்லை என்றும், உடல் சிறிதாக ஆக அருளவேண்டும் எனவும், மேலும் தனக்குத் தேவையான பொற்கோவணம், பொன் பூணூல், பொற்குண்டலங்களைக் கொடுத்து அருளவேண்டும் எனவும் கேட்க அவ்விதமே விஸ்வகர்மா கொடுத்ததாக ஒரு புராணக் கதை சொல்கிறது. இந்த அஞ்சனா தேவி தன் குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருக்கும் காட்சியை ஹரித்வாரில் சண்டி கோயிலுக்கு எதிரே இருக்கும் அஞ்சனை மலையில் காணமுடியும்.
அழகான சுதைச் சிற்பங்கள். அஞ்சனை மடியில் பால ஆஞ்சநேயன். அவரை அணைத்த வண்ணம் தன் இன்னமுதை ஊட்டும் அஞ்சனை. காணக் கிடைக்காத காட்சி இது. மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே ஹநுமத் ஜெயந்தி மார்கழி மாதம் மூல நக்ஷத்திரத்தில் அனுசரிக்கப் படுகிறது. வடக்கே உள்ள ஆந்திர மாநிலத்தில் இருந்து மற்ற வட மாநிலங்களில் எல்லாம் சித்திரை மாதம் பெளர்ணமி அன்றே ஹநுமத் ஜெயந்தி அநுசரிக்கப் படுகிறது. உத்தரப் பிரதேசத்தில் வைசாக பெளர்ணமிக்கு மறுநாள் அநுமத் ஜெயந்தி அனுசரிக்கப் படுகிறது. ஆஞ்சநேயர் சிறு குழந்தையாக இருக்கும் போது சூரியனைக் கண்டு பழம் எனப் பறந்து சென்று உண்டதாகவும், உலகு இருண்டதாகவும், பின்னர் இந்திரனின் வஜ்ராயுதத்தால் அடி பட்டு மயங்கி விழுந்ததாகவும் சில புராணக்கதைகள் கூறுகின்றன. ஆனால் எனக்குத் தெரிந்த தர்க்க நியாயப் படி ஆஞ்சநேயர் சூரியனின் சீடர். சூரியனைச் சுற்றி வந்து அவரின் வேகத்துக்கு ஏற்ப அவருடன் சென்று பாடங்களைக் கற்று நவவியாகரணபண்டிதன் என்னும் பட்டத்தைப் பெற்றவர். சூரியனையே மிஞ்சும் அளவுக்கு ஞானம் அடைந்தவர். இப்படிச் சூரியனையே விழுங்கும் அளவுக்கு ஞானம் பெற்றதாலே இம்மாதிரியான ஒரு கதை வந்திருக்கலாமோ??? பொதுவாய் குருவை சீடன் மிஞ்சி விட்டால் அவனையே விழுங்கிச் சாப்பிட்டுடுவான், அவ்வளவு புத்தி என வழக்குச் சொல்லாகச் சொல்லுவதுண்டு அல்லவா? அப்படி இருக்கலாமோ?? இது என்னோட கருத்து மட்டுமே. மேல் அதிகத் தகவல்கள் சொல்லுபவர்களுக்குக் காத்திருக்கேன்.
Wednesday, December 23, 2009
Monday, December 21, 2009
ஜெய் ஆஞ்சநேயா! ஆஞ்சநேய பிரபாவம்!
"புத்திர் பலம் யசோதைர்யம்
நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச
ஹநுமத் ஸ்மரணாத் பவேத்"
இந்த ஸ்லோகத்தை அறியாதவர்கள் இருக்க முடியாது. அநுமனை எந்நாளும் துதிப்பவர்களுக்கு என்ன கிடைக்கும் என்பதைச் சொல்லுகிறது இது. புத்தி என்பது ஞானத்தை அடைய வேண்டிய புத்தியையும் குறிக்கும். பலம், இங்கே மனோபலம், தேகபலம் இரண்டையும் சொல்கிறது. யசஸ்=நல்ல புகழைத் தரும், தைரியம்= தைரியமாய் இருத்தலையும், நிர்பயத்வம், எதற்கும், எப்போதும் அஞ்சாமையையும் குறிக்கும். தைரியம் என்பது மனோதிடத்தையும் குறிக்கும். அரோகதா என்பது நல்ல ஆரோக்கியத்தைக் குறிக்கும். அஜாட்யம்= ஜாட்யம் என்பது ஜடத் தன்மை. அஜாட்யம் என்றால் ஜடமற்ற தன்மை. முக்கியமாய்த் தேவையான விஷயங்களில் ஈடுபாடைக் காட்டுவதையும், தேவையற்றவற்றை விலக்குவதையும் குறிக்கும். வாக் படுத்வம்= அநுமனைத் தியானிப்பவர்களுக்கு வாக்கு வன்மை அதிகரிக்கும். சொல்லின் செல்வன் ஆன அநுமன் நம்மையும் சொல்லின் செல்வர்களாக மாற்றுவான். அத்தகைய ஆஞ்சநேயனின் சரித்திரத்தைச் சொல்லவும் முடியுமா? அநுமத் பிரபாவம் என்பது எளிதன்று. என்றாலும் இது ஒரு சிறு முயற்சி. ரொம்பச் சுருக்கமாய்ச் சொல்ல முயல்கிறேன். அப்புறம் மான், மழுவோடு இருக்கும் ஆஞ்சநேயர் பத்தின தகவல் தெரிந்தவர்கள் உதவ வேண்டுகிறேன். படம் மேலே பார்க்கலாம். இனி ஆஞ்சநேயரின் சரித்திரம்.
ஆஞ்சநேயர் சரித்திரம் தெரிஞ்சுக்கறதுக்கு முன்னால் கொஞ்சம் பூர்வ கதையையும் தெரிஞ்சுக்கணும். வருணனின் பெண்ணான புஞ்சிதஸ்கலை என்பவளைக் கண்ட ராவணன் அவள் அழகில் மயங்கி வலுக்கட்டாயமாய் அவளைத் தன் விருப்பத்திற்கு இணங்கச் செய்கிறான். ராவணனால் வஞ்சிக்கப் பட்ட புஞ்சிதஸ்கலை ராவணனைப் பழி வாங்க வேண்டும் என எண்ணுகிறாள். ஆனால் ராவணனால் கெடுக்கப் பட்ட இந்த உடலோடு அவனைப் பழிவாங்க அவள் மனம் ஒப்பவில்லை. இப்படிப் பட்டதொரு காமத்தை உடைய ராவணனைத் தண்டிக்க காமனை எரித்த அந்த மஹாதேவனால் தான் முடியும் எனவும் தோன்றியது அவளுக்கு. ஆகையால் ஈசனை நினைத்து எப்போவும் பஞ்சாட்சரத்தை ஜபித்தவண்ணம் காமதகனரின் அருளுக்காகத் தவம் இருக்க அரம்பித்தாள். வரம்பு மீறிய ராவணனின் காமத்தையும் சுட்டுப் பொசுக்க ஈசனாலேயே முடியும் என மனதார நம்பினாள். அவள் இந்தப் பிறவியை விட்டொழிக்க எண்ணியதால் ஈசனும் அவளுக்கு அவ்விதமே இந்த வருணனின்மகள் என்ற பிறவியை விட்டு விட்டு வேறொரு பெண்ணின் வயிற்றில் பிறக்க வைப்பதாகவும், ஆனால் அந்தப் பிறவியில் தாமே அவளுக்கு மகனாய்ப் பிறந்து ராவணனின் காமத்தை மட்டுமல்லாமல் அவன் அழிவுக்கும் காரணகர்த்தாவாய் அமையப் போவதாயும் உறுதி அளித்தார்.
புஞ்சிதஸ்கலைக்கும் மறுபிறவி கிடைக்கிறது. அந்தப் பிறவியிலும் பெண்ணாகவே பிறந்தாலும் அழகற்ற வானரப் பெண்ணாய்ப்பிறக்கிறாள். இவ்விதம் அவள் பிறப்பதற்கு இரு காரணங்கள். அவள் தாய் அகலிகை. அகலிகையோ இந்திரனால் வஞ்சிக்கப் பட்டு அதன் காரணமாய் ஒரு தூசி மாத்திரம் ஒதுங்கி இருந்தவள். பின்னர் ஸ்ரீராமனால் மறு வாழ்வு கிடைக்கப் பெற்றவள். அந்த அகலிகை தன் அழகில் தானே மயங்கி இருந்ததால் தனக்கு நேர்ந்த இழிவை நினைத்து எண்ணி வருந்தி, தனக்குப் பெண் பிறந்தால் அழகே இல்லாத பெண்ணாகப் பிறக்கவேண்டும், என்றும், அந்தப் பெண்ணுக்கு உடல்ரீதியான காமம் என்பது ஒரு பொருட்டாய் இருக்கக் கூடாது எனவும் பிரார்த்தித்துக் கொண்டாள். ஆகவே புஞ்சிதஸ்கலையின் தவத்தின் வேண்டுகோளும், இப்படியே அமையவே அகலிகைக்குப் பெண்ணாய்ப் பிறந்தாள் அஞ்சனை.
அஞ்சனை வளர்ந்து வாநர வீரன் கேசரியை மணந்தாள். இந்தக் கேசரி வனத்தில் வசிக்கும் முனிவர்கள் தவத்திற்கு இடையூறு செய்து வந்த மதயானைகளைக்கொன்றதால் கேசரி என்னும் பெயர் கிடைத்தது. இருவருக்கும் மணவாழ்க்கையில் விருப்பம் இல்லாமல் தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். என்றாலும் இடை இடையே தங்கள் பெயர் சொல்ல ஒரு புத்திரன் பிறக்கவில்லை என்ற எண்ணமும் தோன்றியது. உடல்ரீதியான சம்பந்தமே இல்லாமல் புத்திரனாவது, பிறப்பதாவது?? என்றாலும் கேசரியும் சுபாவமாகவே சிவ பக்தன். இப்பிறவியிலும் அஞ்சனை தன் சிவபக்தியைக் கைவிடாமல் பின்பற்றி வந்தாள். ஆகவே இருவருமே தவமியற்ற ஆரம்பித்தனர். அப்போது ஈசனுக்குத் தான் அவதாரம் செய்யவேண்டிய தருணம் நெருங்கிவிட்டது எனத் தோன்றியது. வாயுவின் உதவியோடு தான் செய்யவேண்டிய காரியத்தைச் செய்ய நினைத்தார்.
சுவாசத்துக்கு ஆதாரமான காற்றுக்கு வாயு என்றே பெயரல்லவா? சிவசக்தி சொரூபமான உணர்வு நிலை ஒன்று திரண்டு பேராற்றல் மிக்கதொரு சக்தியாக மாறி வாயுவிடம் கலந்தது. தவம் புரியும் அஞ்சனையை அந்த வாயு நெருங்கவே, அந்தச் சக்தியானது அவள் மூச்சுக் காற்றின் மூலம் உள் புகுந்தும் விட்டது. சிலர் வேறு ஒன்றும் கூறுவர். பிள்ளைப் பேறு வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் செய்த தசரதனுக்குக் கொடுக்கவென யாக தேவர்கள் கொண்டு சென்ற பாயாசக் கிண்ணத்தில் இருந்து ஒரு சொட்டுப் பாயாசம் கீழே தவம் செய்த அஞ்சனையின் வாய் உதட்டின் மேல் விழுந்ததாகவும் அவள் அதை நக்கிச் சாப்பிட்டதாகவும் அதன் பயனாக அநுமன் பிறந்ததாகவும் சொல்வார்கள். இன்னும் சிலர் தவம் செய்து கொண்டிருந்த அஞ்சனையின் எதிரே வாயுதேவன் தோன்றித் தன் கையிலிருந்த கனியை உண்ணச் செய்ததாகவும் அதன் பலன் ஆஞ்சநேயனாகப்பிறந்தார் என்றும் சொல்வார்கள். எது எப்படியோ சிவ ஸ்வரூபம் விஷ்ணு ஸ்வரூபத்திற்கு உதவவேண்டும் எனத் தானும் அவதாரம் செய்து விட்டது. அடிப்படைக் காரணமே ராவணன்.
ஈசன் வரம் கொடுத்துவிட்டு ராவணனை அவரால் அந்த வரங்களுக்கு மாறாய் அழிக்க முடியாது. ஆனால் வரங்களைத் தவறாய்ப் பயன்படுத்திய ராவணனோ திருந்தவே இல்லை. மேலும் விஷ்ணுவிற்கு பிருகு முனிவரின் சாபமும் இருக்கிறது. பூமியில் மானிடனாய்ப் பிறந்து மனைவியைப் பிரிந்து துக்கம் அநுபவிக்கவேண்டுமென. அதையும் நிறைவேற்ற வேண்டும். கைலை மலையைப் பெயர்க்கச் சென்ற ராவணன் நந்தியைப் பார்த்துக் குரங்கு எனப் பழிக்க, அவரும் குரங்காலேயே உன் வம்சம் அழியும் எனவும் கூறி உள்ளார். அதுவும் நடந்தாகவேண்டும். இத்தனை காரண, காரியங்களை உள்ளடக்கியே அநுமன் விஜயம் ஆரம்பம் ஆனது.
ஜெய் ஆஞ்சநேயா!

Saturday, August 8, 2009
ராம நாம உபதேசம் சாதாரணமானதா???
“ராம” என்ற இரண்டெழுத்து சாதாரணமாய்த் தோன்றலாம். ஆனால் இந்த ராம நாமம் உபதேசம் பெறவேண்டிக் காத்திருந்தவர்களில் கபீர்தாஸரும் ஒருவர். பிறப்பால் முஸ்லீம் என்று சொல்லப் பட்டாலும், (சிலர் பழக்கவழக்கங்களும், சுற்றுச் சூழலுமே காரணம் என்றும் சொல்லுவார்கள்) எப்படியானாலும் கபீரின் மனம் பூராவும் ராம நாமத்திலேயே லயித்தது. அதில் தான் இம்மைக்கும், மறுமைக்கும் வேண்டிய ஆநந்தம் இருக்கிறது என்பதைப் பூரணமாய் உணர்ந்தார் கபீர். ஆனால் இந்த மந்திரத்தைத் தாமாகச் சொல்லுவதை விட குரு மூலம் உபதேசம் பெற்றுச் சொன்னால்?? ஆஹா! அத்தகைய குரு நமக்குக் கிடைப்பாரா?? ஏன் கிடைக்க மாட்டார்? இதோ ராமாநந்தர் இருக்கிறாரே? தினம் தினம் ராமாநந்தரின் வழிபாட்டு சமயத்தில் ராம, லக்ஷ்மணர்கள் நேரிலேயே தோன்றி வழிபாட்டை ஏற்பது வழக்கம். அத்தகையதொரு குரு மட்டும் கிடைத்துவிட்டால்??? தன் நெசவுத் தொழிலைக் கூட மறந்து ராம நாமத்தில் லயித்துப் போயிருந்த கபீருக்கு, ராமாநந்தர் உபதேசம் என்பது சும்மா வெளிப்பார்வைக்கு மட்டுமே. என்றாலும் அந்த ராமன் கபீரின் இந்தச் சின்னஞ்சிறு ஆசை மூலம் வேறே எதையோ யாருக்கோ உணர்த்த விரும்பினானோ?
கபீரும் ராமாநந்தர் உபதேசிப்பாரா மாட்டாரா என்ற சந்தேகத்துடனேயே வேறு நபர்களையும் நாடினார். யாருமே கபீருக்கு ராம நாமத்தை உபதேசிக்கவில்லை. ராமாநந்தரிடமே நேரிடையாகச் சென்று வேண்டுகோள் விடுத்தார் கபீர்தாஸர். ராமாநந்தர் மறுத்துவிட்டார். அந்நிய மதத்தைச் சேர்ந்தவனுக்கு ராமநாம உபதேசமா? இகழ்ச்சியுடனேயே ராமாநந்தர் கபீரை அங்கிருந்து போகச் சொன்னார். கிட்டத் தட்ட விரட்டப் பட்டார் கபீர். ராமாநந்தரின் அன்றைய வழிபாடு தொடர்ந்தது . வழிபாடு முடிவதற்குள்ளாக ராம, லக்ஷ்மணர்கள் வந்துவிடுவார்கள். ஆனால்,, ஆனால் இன்று வரவில்லையே?? ஏன்?? என்ன குறை?? பூஜைக்கான பொருட்களில் எதுவும் குறைவில்லை. ஆசார, அனுஷ்டானங்களிலும் குறைவில்லை. என்றாலும் நேரில் வந்து இத்தனை நாட்கள் பூஜையை ஏற்ற ராமன் இன்று வரவில்லையே? ஏன்? என்ன காரணம்? துன்பம் அடைந்தார் ராமானந்தர்.
மெல்ல எழுந்து வெளியே வந்தார். மடத்தின் வாயிலில் நின்று கொண்டு யோசித்தவண்ணம் அங்குமிங்கும் பார்த்தார். சுற்றுமுற்றும் தேடினார். அப்போது அசரீரி போன்ற ஒரு குரல்,” அண்ணா, அண்ணா, என்ன இது?” என்று கேட்டது. யார் பேசுவது?? குரல் மட்டுமே வருகிறதே? ராமாநந்தர் உற்றுக் கவனித்தார். “லக்ஷ்மணா, என்ன விஷயம்?” என்று மறு குரலும் கேட்டது. ஆஹா, ராம, லக்ஷ்மணர்கள் கடைசியில் நம் பூஜைக்கு வந்தே விட்டார்களா??? ராமாநந்தர் உற்சாகத்தில் ஆழப் போகும் சமயம். லக்ஷ்மணன் என்று அழைத்த குரல்” அண்ணா என்ன இது? இன்று ராமாநந்தரின் வழிபாடலில் கலந்து கொள்ளாமல் திரும்பலாம் என்று சொல்லிவிட்டாயே?” ராமாநந்தருக்குத் தூக்கிவாரிப் போட்டது. என்ன நம் வழிபாட்டில் ராமன் கலந்து கொள்ளப் போவதில்லையா? ராமன் குரல் கேட்டது அப்போது,” ஆம், தம்பி லக்ஷ்மணா, உத்தம பாகவதன் கபீர், என்னைத் தவிர வேறு யாரையுமே எப்போது நினையாதவன். அவன் என்னுடைய நாமாவைச் சொல்லுவதைக் கேட்கும்போதே எனக்குப் பரவசமாய் இருக்கும். அத்தகையவன் ராமாநந்தரிடம் உபதேசம் பெற வந்தான். அவனை விரட்டி விட்டார்களே! என் பக்தன் விரட்டப் பட்ட இடத்தில் எனக்கு என்ன வேலை? வா, நாம் போகலாம்.” எங்கும் அமைதி. ராமாநந்தர் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. அவர் கண்களால் ராமனும், லக்ஷ்மணனும் அங்கிருந்து திரும்புவதையும் உணரமுடிந்தது.
ஆஹா, ராமனே வந்து கபீருக்கு மந்திர உபதேசம் செய்யாதது என் தவறு எனச் சுட்டிக் காட்டிவிட்டானே? அப்படி எனில் அந்தக் கபீர் எத்தனை பெரிய பாகவதோத்தமனாய் இருக்கவேண்டும்? அவனுடைய தேடுதல், ராமனைப் பற்றிய பக்தி எத்தனை விசாலமாய், ஆழமாய் இருந்திருக்கவேண்டும். நாம் தான் ராமனைப் பற்றிப் பாடுகிறோம், பேசுகிறோம், ராமன் நேரில் வருகின்றான் என நினைத்தது எவ்வளவு பெரிய தவறு? நம்மிலும் பெரிய பரமபாகவதன் கபீரை அவமதித்துவிட்டேனே? ராமாநந்தர் கபீர் எங்கு இருப்பார் என விசாரித்தார். கங்கை நதிக்கரையில் இருப்பார் எனத் தெரிய வந்தது. உடனேயே அங்கே விரைகிறார். தூரத்தில் இருந்தே ராமாநந்தர் வருவதைப் பார்த்துவிடுகிறார் கபீர். குருவானவர் வருகிறார். எதற்கு, என்ன என நமக்குத் தெரியாது. பெரும் பதட்டத்தோடு வேறு வருகிறார். அதை அதிகப்படுத்தும் வண்ணம் நாம் இன்னும் நேரில் அவருக்கு முன்னால் போய் தொந்திரவு செய்யக் கூடாது.
ஒரு க்ஷணம் தான். கபீர் தன் உடம்பைக் குறுக்கிக் கொண்டு கங்கைக் கரையின் படித்துறைப் படிகளில் ஒன்றில் படியோடு படியாகப் படுத்துக் கொண்டார். அந்த வழியாக ராமாநந்தர் வருவார் என்ற நிச்சயத்துடன் காத்திருந்தார். ராமாநந்தரும் வந்தார். சுற்றுமுற்றும் பார்த்துக் கபீரைத் தேடினார். எங்கும் கிடைக்கவில்லை. படிகளில் இறங்கிப் பார்ப்போம் என இறங்கினால், படியென நினைத்து அவர் மிதித்தது, யாரோ மனிதனை அன்றோ? ஆஹா, என்ன இது? “ராம், ராம்” என்று அலறிக் கொண்டே நகர்ந்தார். கீழே இருந்து பதில் வந்தது. “வந்தனம் குருதேவரே! என்னைக் காலாலும் தீண்டி, மந்திர உபதேசமும் செய்து வைத்தமைக்குப் பலகோடி வந்தனங்கள்” கபீரின் கண்களில் இருந்தும் கண்ணீர் பெருகியது

Friday, August 7, 2009
ராம என்ற இரண்டெழுத்தின் மகிமை!
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராமவென்றிரண்டெழுத்தினால்.
இந்தப் பாடலில் ராம என்ற இரண்டெழுத்தின் மகிமை பற்றிக் கூறி உள்ளது. ராம என்ற இரண்டெழுத்தை ஜபித்து வந்தால் நன்மையும், செல்வமும் தருவதோடு மட்டுமல்லாமல், நம் பாவங்களும் தொலையும் என்றும், மறு ஜென்மம், அதனால் மரணம் என்றெல்லாம் இல்லாமல் முக்தியை அடைவோம் இந்த இம்மையிலேயே என்றும் சொல்லுகின்றது. இத்தனைக்கும் ராமாயணம் எழுதியது என்னமோ ஒரு கொள்ளைக்காரர் தான். ராமாயணத்திலேயே இந்த ராம என்ற இரண்டெழுத்தின் வல்லமை பற்றி அநேக இடங்களில் சான்றுகள் கூறி உள்ளார் வால்மீகி. அவ்வளவு ஏன்? வால்மீகி இந்தக் காவியத்தை எழுதுமளவுக்கு புலமை பெற்றதே “ராம” என்ற இரண்டெழுத்தை ஜபித்துத் தவம் செய்ததால் அல்லவோ?
ரத்னாகர் என்னும் கொள்ளைக்காரன் தன் குடும்பத்தையே கொள்ளை மூலம் காத்து வந்தான். ஒரு சமயம் சப்தரிஷிகளும் கானகத்தின் வழியே பிரயாணப் படும் போது அவர்களையும் தன்னியல்புப் படி கொள்ளை அடிக்க முயல, அவர்களோ அவனுக்குப் புத்திமதி சொல்லித் திருத்த முயன்றனர். இந்தக் கொள்ளை அடிப்பதால் வரும் பாவமூட்டையை அவன் ஒருவனே சுமக்கவேண்டும் எனவும், அவன் குடும்பம் இதற்கு ஒத்துழைக்காது எனவும் புரிய வைத்தனர். அவனுக்கும் புரிந்துபோனது. “ராம” நாமத்தை உபதேசித்தனர் சப்தரிஷிகளும் அந்தக் கொள்ளைக்காரனுக்கு. இதை உச்சரித்தபடியே தவம் செய்யச் சொன்னார்கள். அவனும் விடாமுயற்சியுடன் ராம நாமத்தை உச்சரிக்க உச்சரிக்க மெய்ம்மறந்து, தன்னை மறந்து, பசி, தாகம் என்ற எந்த உணர்வும் இல்லாமல் தவம் செய்ய ஆரம்பித்துவிட்டான். அவனைச் சுற்றி மண் மூடிப் புற்றாக மாறியது. உயரமாய்ப் புற்று வளர்ந்தும் விட்டது. என்றாலும் அவன் விடாமல் ராம நாமத்தை ஜபித்து வந்தான்.
திரும்பிச் சென்ற சப்தரிஷிகள் கானகத்தைக் கடக்கும்போது ரத்னாகரின் நினைவு வந்து அவனை அழைத்தனர். ராம நாம உச்சரிப்பும் அவர்களைக் கவர்ந்தது. ரத்னாகரை அழைக்க அவனோ புற்றிலிருந்து வெளிப்பட சப்தரிஷிகள் மனம் மகிழ்ந்து அவனை வால்மீகி என அழைத்தனர். அவனால் ஒரு பெரிய காரியம் நடக்க இருப்பதையும் குறிப்பால் உணர்த்திச் சென்றனர். வால்மீகியும் ராமாயணத்தைப் படைக்கும் திறனைப் பெற்றார். இது எதனால் நடந்தது? ராம நாமத்தை உச்சரித்ததால் அன்றோ? அதுவும் ராமர் இருக்கும்போதே ராமாயணத்தை அரங்கேற்றமும் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது வால்மீகி ஒருவருக்குத் தான்.
இத்தகைய மனிதருள் மாணிக்கம் ஆன ராமனைப் பற்றி மஹா பாரதம் என்ன சொல்கிறது? உத்தராயனம் வருவதை எதிர்நோக்கி. பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறார் . அப்போது அரசனுக்குரிய தர்மங்களைப் பற்றி யுதிஷ்டிரனுக்கு எடுத்துக் கூறுகின்றார். அப்போது பிறந்ததே விஷ்ணு சஹஸ்ரநாமம். இந்த நாமாவளிகளிலேயே, “ராம” நாமத்தை மட்டும் உயர்வாய்க் கூறுகின்றார். தர்மங்களில் சிறந்தது நாமங்களை உச்சரித்தலே என்று சொல்லும் பீஷ்மர், அதிலும் “ராம” என்னும் இரண்டெழுத்து மந்திரத்தை உச்சரித்தல் அதனிலும் உயர்வானது என்பதையும் சுட்டிக் காட்டுகின்றார் கீழ்க்கண்ட ஸ்லோகம் மூலமாக/
“ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே!
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வராநனே!!” என்று சொல்லுகின்றார். மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் அந்த வேளையிலும், “ராம” நாமத்தை உச்சரிப்பதைப் பற்றிக் கூறி, அதுவே அனைத்திலும் சிறந்த உயர்வான ஒன்று என்றும் கூறுகின்றார்.

Tuesday, July 21, 2009
ராமனுக்கு யார் நிகர்?
பத்ராசலம் போனதே இல்லை. பத்ராசலம் போய் அங்கே ராமரைப் பார்த்துட்டு வரணும்னு ஓர் ஆசை. இந்தப் பக்கம் வந்து பதிவு போட்டு பல நாட்கள் ஆகிவிட்டன. ஒரு பதிவு தயார் செய்திருக்கேன். என்றாலும் திங்களுக்குப் பின்னர் தான் போட முடியும். பின் தொடருகின்றவர்களுக்கு நன்றி. பத்ராசலத்தில் தான் ராமர் லக்ஷ்மணனுடன் தங்கி இருந்ததும், பொன்மானைப் பார்த்து சீதை ஆசை கொண்டதும், ராவணன் சீதையைக் கவர்ந்து சென்றதும் என்று சொல்லப் படுகிறது. இதற்குப் பின்னர் நடந்த வாலிவதம் நடைபெற்ற குகையை நவபிருந்தாவனம் செல்லும்போது பார்க்க நேர்ந்தது. இந்த பத்ராசலம் பலரையும் கவர்ந்த ஓர் இடம். பத்ரா என்ற மலைக் குழந்தை மேரு மலையான மலையரசனுக்கும், மேனகாவுக்கும் வரத்தின் மூலம் பிறந்த குழந்தை என்று சொல்லப் படுகின்றது.கோதாவரி நதி தென்முகமாய்ச் சுற்றிக் கொண்டு போகும் இடத்தில் உள்ள பத்ரா மலையில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. தண்டகாரண்யம் என ராமாயணத்தில் சொல்லப் பட்டதும் இது தான். பத்ரா பல யுகங்கள் தொடர்ந்து ராமரைக் குறித்து தவம் செய்ததாகவும் சொல்லப் படுகிறது. ராமரைத் தன் தலையில் தாங்கிக் கொண்டு செல்லத் தயாராக இருந்ததாயும், சீதையைக் காணாமல் தவித்துக் கொண்டிருந்த ராமர், தற்சமயம் அவருடைய ஆவலைப் பூர்த்தி செய்யமுடியாது என்று சொன்னதாகவும், மனைவியைத் தேடிக் கொண்டு செல்வதாகவும் மனைவியைக் கண்டுபிடித்து அவளைத் தூக்கிச் சென்ற ராவணனைக் கொன்று அவனுக்குத் தண்டனை அளித்து தர்மத்தை நிலை நாட்டவேண்டும் என்றும் சொல்லிச் சென்றார்.
சீதையைக் காணாமல் இராமன் திகைத்து நிற்றல் (3574-3575)
3574 ஓடி வந்தனன், சாலையின்
சோலையின் உதவும்
தோடு இவர்ந்த பூஞ் சுரிக் குழலாள்
தனை காணான்,
கூடு தன்னுடையது பிரிந்தாருயிர்,
குறியா,
நேடி வந்து, அது கண்டிலது என
நின்றான். 158
சீதையைக் காணாத ராமன் இவ்விதம் திகைத்துப் போனான் என்று கம்பர் சொல்லுகின்றார். ராமாயணம் படிப்பதும் சரி, கேட்பதும் சரி மனப்புண்ணை ஆற்றும். அந்தப் பரப்பிரம்மமே மனைவியைத் தொலைத்துவிட்டுக் குலுங்கி அழுதது என்பதை உணரும்போது நாமெல்லாம் என்ன சாமானியம், தூசி மாத்திரம் என்றே தோன்றும். அவனுக்குத் தெரியாதா தான் யார் என?? ஆனால் அவன் அப்போது ஒரு மனிதனாக அல்லவோ வாழ்ந்து காட்டிக் கொண்டிருந்தான். சாமானிய மனிதனுக்கு ஏற்படும் அனைத்துக் கஷ்டங்களும் அவனுக்கும் ஏற்படுத்திக் கொண்டு அதில் இருந்து ஒரு சாமானியன் எவ்வாறு மீள்வானோ, தர்மத்தின் பாதையில் இருந்து சற்றும் பிறழாமல் எவ்வாறு வாழவேண்டுமோ அவ்வாறே வாழ்ந்து காட்டி ஒரு முன்மாதிரியாக அல்லவோ திகழ்ந்தான். ஒரு மனிதனுக்கு எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதைத் தாங்கும் வல்லமையை ராமநாமமும், ராமாயணத்தைப் படிப்பதும், ராமன் பெருமையை நினைப்பதும் தரும். ராமனின் பெருமையைச் சொல்லச் சொல்ல நா இனிக்கும், மனம் அமைதி பெறும்.
வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே|
வேத:ப்ராசேதஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா||
"வேதவேத்யே"- வேதத்தினால் அறியப்பபட வேண்டிய ஒருவன், அவனே பரம்பொருள். அவன் யார்?" பரே பும்ஸி"- பரம புருஷன். வேதத்தினாலே அறியப்பட வேண்டிய பரம
புருஷன். ஜாதே தசரதாத்மஜே=அந்தப் பரம்பொருளே வேதத்தினாலே அறியப்பட வேண்டிய பரம புருஷனே ராமனாக உலகில் அவதாரம் செய்தான். வேத: ப்ராசேதஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா= அவன் தசரதனுடைய குழந்தையாக அவதாரம் செய்தவுடன்,வேதம், ராமாயணமாக அவதாரம் பண்ணுவோம் என்று வால்மீகியின் குழந்தையாக
வந்தது!
ராமாயண காவியத்தில் இல்லாததே கிடையாது. தினம் ஒருமுறை அதில் ஓர் அத்தியாயத்தை மட்டுமாவது படித்தாலே போதும். வேத பாராயணம் பண்ணமுடியலையே எனப் பெண்கள் வருந்தாமல் இதைப் படிச்சாலே போதும். மனம் அமைதி பெறும். ராமநாம மஹிமை தொடரும்.
Sunday, May 31, 2009
ராமா நீ சமானமெவரு!
ராமனுக்கு யாரும் நிகரில்லை. தன்னுடைய தந்தையின் ஒரு சொல்லுக்காகத் தனக்கு உரிமையுள்ள நாட்டையே விட்டு விட்டுக் காட்டிற்குச் சென்றான். காட்டிலும் க்ஷத்ரிய தர்மத்தின்படி அனைவரையும் காப்பது தன் கடமை என ஒரு ரக்ஷகனாய் இருந்தான். மனைவியைப் பறி கொடுத்து அவன் ஒரு அன்பான உண்மைக் கணவனாய் துடிதுடித்து அழுதான். அவன் யார் சாக்ஷாத் ப்ரப்ரும்மமே அவன் தான். என்றாலும் சாக்ஷாத் ப்ரப்ரும்மமாகவே அவன் இருந்தாலும், அந்த ப்ரும்மமே துடிதுடித்து அழுதது மனைவியைக் காணோம் என.3574 ஓடி வந்தனன், சாலையின்
சோலையின் உதவும்
தோடு இவர்ந்த பூஞ் சுரிக் குழலாள்
தனை காணான்,
கூடு தன்னுடையது பிரிந்தாருயிர்,
குறியா,
நேடி வந்து, அது கண்டிலது என
நின்றான். 158
3575 கைத்த சிந்தையன், கணம் குழை
அணங்கினைக் காணாது,
உய்த்து வாழ்தர வேறு ஒரு
பொருள் இலான், உதவ
வைத்த மா நிதி, மண்ணொடு
மறைந்தன, வாங்கிப்
பொய்த்து உளோர் கொளத் திகைத்து
நின்றானையும் போன்றான். 159
எதுக்கு? கட்டிய மனைவியின் மேல் ஓர் கணவன் வைக்கும் பாசமும், அன்பும் எத்தகையது என நாம் புரிந்து கொள்வதற்காக. ஓர் சாதாரணக் கணவனைப் போல் அழுது புலம்பினான். ராம நாமத்தின் மஹிமை பற்றிப் பலரும் சொல்கின்றனர். ஆனால் அந்தப் பெயரை வைத்துக் கொண்டே, ஓர் அவதார புருஷனாக இருந்து கொண்டே ராமன் அழுகின்றானே? இவன் எப்படிக் கடவுளின் அவதாரம் ஆவான்? சாதாரண மனிதன் போல் அல்லவா மனைவியைக் காணோம், ராக்ஷஸன் தூக்கிப் போனானே எனக் கதறுகின்றானே? தன் மனைவியைக் காக்கத் தெரியாதவன் கடவுளின் அவதாரமா எனக் கேட்கின்றனர்.
3577 “அறத்தைச் சீறுங்கொல்? அருளையே
சீறுங்கொல்? அமரர்
திறத்தைச் சீறுங்கொல்? முனிவரைச்
சீறுங்கொல்? தீயோர்
மறத்தைச் சீறுங்கொல்? ‘என் கொலோ
முடிவு? ‘என்று மறையின்
நிறத்தைச் சீறுங்கொல்? நெடுந்தகையோன் ‘‘
என நடுங்கா. 161
ஆம், அவன் கடவுளின் அவதாரம் தான். ஆனால் இந்த அவதாரத்தில் அவன் ஒரு பூரண மனிதனாக அல்லவோ வாழ்ந்து காட்டினான். மனிதர்கள் அதிலும் ஓர் அரசன் கடைப்பிடிக்க வேண்டிய நீதிநெறிகள், தர்மம் போன்றவற்றை எப்போது எந்த வகையில் கடைப்பிடிக்கணுமோ அப்படியல்லவோ கடைப்பிடித்து வாழ்ந்து வந்தான். அனைவருக்கும் ஓர் முன்மாதிரியாக அல்லவோ வாழ்ந்து காட்டினான். அவன் வாழ்ந்தது என்னமோ சாதாரண அரசகுமாரனின் வாழ்க்கையைத் தானே? ஒரு அரசகுமாரன் வாழ்க்கையில் தோன்றும் காதல், வீரம், சோகம், பெற்றோர் மேல் பாசம், சகோதரர் பாசம், சண்டைகள், குடும்பக் குழப்பங்கள், சமாதானங்கள், அதீத ஆசைகள், காமங்கள் என எல்லாமும் நிரம்பிய ஒன்றே அவன் வாழ்ந்த வாழ்க்கை. அதனாலேயே கடைசிவரையில் தான் யார் எனக் காட்டிக் கொள்ளாமலேயே சாதாரண மனிதனைப் போலவே மனைவியை மாற்றான் தூக்கிச் செல்லக் கொடுத்துவிட்டுத் தேடித் தேடி அலைந்து திரிந்தான். இதெல்லாம் அவன் எதுக்குச் செய்தான்? நம் போன்ற சாமானியர்கள் அதைப் பார்த்து ஓரளவேனும் கற்றுக் கொள்ளவேண்டும் என்றே. ராமனைப் போல் நாம் வாழவேண்டும் என்பதற்காகவே. எத்தனை கஷ்டம் அடைந்தாலும் தன் தர்மம் என எது கடைப்பிடிக்கப் படுகின்றதோ, அதிலிருந்து சற்றும் வழுவாமல், தன் குடிமக்களைத் தன் பெற்ற மக்கள் போல் ஓர் அரசன் நினைக்கவேண்டும் என்பதை சொல்லாலும், செயலாலும் கடைப்பிடித்தான். இன்றைய ஆள்வோருக்கும், இன்றைய நாகரீக வாழ்க்கையை மேற்கொள்வோருக்கும் மட்டுமே ராமன் செய்தது அநியாயம், மனைவியைத் துன்புறுத்தினான் என்று எல்லாம் தோன்றும்.
ஆனால் உற்று நோக்கினால் தன் அன்பு மனைவியுடன் நடத்தும் குடும்ப வாழ்க்கையை விடத் தன் குடிமக்களின் நல்வாழ்வும், தன் ராஜ்ஜியத்தின் மேன்மையுமே அவனுக்கு மிக மிக முக்கியமாய்ப் பட்டது. அதனாலேயே அவன் குடும்ப வாழ்க்கையைத் துறந்தான். மனைவியைப் பிரிந்த அவன் அதனால் உடனேயே வேறு பெண்ணையும் நாடிப் போகவில்லை. மனைவியுடன் கூடி வாழ்ந்த இன்ப நினைவுகளிலேயே காலத்தைக் கழித்தான். எத்தனை பேரால் இது முடியும்? ஓர் ஆதர்ஸ புருஷனாக வாழ்ந்த ராமனைக் குற்றம் சொல்லுபவர்கள், சீதையைத் துன்புறுத்தினான் என்று சொல்லுபவர்கள் வெறும் விவாதத்துக்காகவே சொல்லுகின்றனர். அரசனுடைய, ஆட்சியாளனுடைய தர்மம் எது என்பதைத் தன் நடத்தையின் மூலம் சுட்டிக் காட்டினான். தனக்கென உரிமையானதைக் கூடத் துறந்தான். பதவியைத் தேடி அலையவில்லை. தன் மக்களுக்கெனச் சொத்து, சுகம் சேர்க்கவில்லை. ஆட்சியில் இருந்தும், அனைத்தையும் துறந்து ஓர் துறவி போலவே வாழ்ந்தான். ராமா உனக்கு நிகர் ஏது? நீ மட்டுமே தான். உன்னைப் போல் மீண்டும் ஓர் ராமன் தோன்றுவானோ?
ராமனின் கல்யாண குணங்கள் ஒன்றொன்றாய்ப் பார்க்கலாமா??
Tuesday, May 5, 2009
ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம்!

ஸ்ரீராமனையும், அவன் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களையும் நினைத்தாலே தன்னை மறந்து அழுதுவிடுவார் ஸ்ரீ ஸ்வாமிகள். பெற்றோர் அவர் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என விரும்ப அவர்கள் விருப்பத்திற்கேற்ப ஜானகி என்னும் பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டார். நாடெங்கும் பாத யாத்திரையாகவே சென்று ராமநாமத்தின் மகிமையைப் பாடியும், ஆடியும், பஜனைகள் செய்தும் அற்புதமாய் நடத்தி வந்தார். உஞ்சவிருத்தி, பூஜை, உபந்யாஸம், பஜனை என்று பாகவத தர்மத்தை விடாமல் கடைப்பிடித்தார். ஏராளமான சீடர்கள் இவருடைய யாத்திரையில் இவருடன் பங்கு கொண்டனர். ராமநாம ஜபம் செய்து ஆனந்தத்தை அனுபவித்தனர். ஒரு முறை ராம ஜன்ம பூமியான அயோத்திக்குச் சென்று கொண்டிருந்தபோது, இவருடைய தூக்கத்தில் ஒரு கனவு. அந்தக் கனவில் தோன்றியவர் யார்? ஸ்ரீஸ்ரீ போதேந்திர ஸ்வாமிகள் அவர்களே தான் கனவில் தோன்றினார். ஸ்ரீ சத்குரு ஸ்வாமிகளைத் தென் திசைக்குப் போகச் சொல்லி, அங்கே ஒரு நற்காரியம் இவர் மூலம் நிகழப் போவதாய்ச் சூசகமாய்ச் சொல்லி மறைந்தார்.
குருவின் கட்டளைப்படி தெற்கே வந்த ஸ்வாமிகள் தஞ்சை ஜில்லா மருதாநல்லூர் என்னும் ஊருக்கு வந்தார் . அங்கே வசித்து வந்த வெங்கடராம ஐயர் என்னும் தனவான் ஸ்வாமிகளை அழைத்துத் தம் இல்லத்திலேயே வைத்து உபசரித்தார். அங்கே சில நாட்கள் தங்கிய ஸ்வாமிகள் அந்த ஊரிலேயே தம் தாயாருடனும், மனைவியுடனும் தங்கி உஞ்சவிருத்தி, நாம ஜபம் போன்றவற்றைத் தொடங்கினார். ஆனால் குருநாதர் சொன்ன வேலையைச் செய்ய வில்லையே என்ற தாபமும் இருந்தது.
குருநாதர் அதிஷ்டானம் அப்போது காவிரிக்குள் மறைந்து முழுகி இருந்தது. அதைக் கண்டு பிடித்து பக்தர்களுக்குத் தெரியப் படுத்துவதே தம் முதல் கடமை என உணர்ந்த ஸ்ரீஸ்வாமிகள் அப்போதைய தஞ்சை மகாராஜாவின் விருப்பத்தைக் கேட்டறிந்தார். அதன்படி காவிரி நதியைச் சற்றே திசை திருப்பி வடப்பக்கம் திருப்பி, போதேந்திராளின் அதிஷ்டானம் கண்டுபிடிக்கப் பட்டதும் அதற்கு எதிர்காலத்தில் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படா வண்ணம் தடுப்பு வேலைகளைத் திறம்படச் செய்து முடித்தார். எல்லாம் சரி, அதிஷ்டானத்தை எப்படிக் கண்டு பிடிப்பது?காவிரிக்குள் முழுகி இருக்கும் அதிஷ்டானத்தைக் கண்டறிய ஒரு வழியைக் கண்டறிந்தார் ஸ்ரீ சத்குரு ஸ்வாமிகள். தம் கால்களில் துணியைச் சுற்றிக் கொண்டு சுட்டெரிக்கும் வெயிலில் காவிரி நதியின் மணலில் படுத்து உருண்டு செல்வார். ஏன்? நடந்து சென்று பார்க்கக் கூடாதா? பார்க்கலாம். ஆனால் அதிஷ்டானம் இருக்கும் இடத்தில் தம்முடைய கால்கள் பட்டுவிட்டால்??? அதற்காகவே உருண்டு சென்றார் ஸ்ரீ ஸ்வாமிகள். உருண்டு செல்லும்போதே ஒவ்வொரு இடத்திலும் தம் காதுகளை வைத்து உன்னிப்பாய்க் கவனித்தபடி செல்வார் ஸ்ரீஸ்வாமிகள். ஒருநாள் ஒரு இடம் வந்ததும், “இதோ, ஸ்ரீ போதேந்திராளின் அதிஷ்டானம் இருக்குமிடம். அவருடைய ஜீவன் இங்கே தான் உறங்கிக் கொண்டிருக்கிறது.” என்று சொல்லிவிட்டு ஆனந்தத்தில் குதித்து ஆடிப் பாடினார். சுற்றி நின்றவர்களுக்கும், கூட இருந்தவர்களுக்கும் ஒரே ஆச்சரியம்! இது எங்கனம் நடந்தது?
ஸ்ரீஸ்வாமிகள் சொன்னார்: உருளும்போதே என் காதுகளை வைத்துக் கவனித்துக் கொண்டு வந்தேன் அல்லவா? அப்போது மற்ற இடங்களில் எல்லாம் அமைதி நிலவ, இந்த ஒரு இடத்தில் மட்டும் “ராம” நாமம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆகவே இங்கு தான் அதிஷ்டானம் இருக்கவேண்டும்.” என்று சர்வ நிச்சயமாய்ச் சொன்னார்.

அனைவரும் மகிழ்ந்ததோடு அல்லாமல் சத்குருவின் யோக சக்தியையும் கண்டு வியந்தனர். அனைவரும் அங்கேயே விழுந்து நமஸ்கரிக்க, மன்னனுக்குத் தகவல் சொல்லப் பட்டு, அதிஷ்டானத்துக்குப் பாதிப்பு ஏற்படா வண்ணம் காவிரி திருப்பி விடப் பட்டு, அதிஷ்டானமும் புனர் நிர்மாணம் செய்யப் பட்டது.
அரசன் சத்ரபதி சிவாஜியின் வழித் தோன்றல் ஆவான். இயல்பாகவே இறைவழிபாட்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவன். இப்போது ஸத்குரு ஸ்வாமிகளின் பிரதம சிஷ்யனாகவும் ஆனான். ஸத்குரு ஸ்வாமிகளுக்கு மட்டுமில்லாமல் அவரைப் பின்பற்றும் அவரது சிஷ்யர்கள் அனைவருக்கும் ஏதேனும் செய்ய விரும்பினான் மன்னன். ஸத்குரு ஸ்வாமிகளைக் கலந்து ஆலோசித்துக் கொண்டு ராமநாம ஜபம் ஜபிக்கும் இந்த பாகவதர்கள் அனைவரும் நிரந்தரமாய்த் தங்கும் வண்ணம் ஒரு கிராமத்தையே, மான்யம் அளித்தான். ஸத்குரு ஸ்வாமிகள் மனம் மகிழ்ந்து மன்னனிடம் அந்த கிராமத்தை பாகவதர்கள் பெயரிலேயே மான்யம் செய்து கொடுக்கச் சொல்ல திருவிசநல்லூருக்கு அடுத்து இருக்கும் ஒரு கிராமம் ஒன்றையே பாகவதபுரம் என்ற பெயரில் மான்யமாய்க் கொடுத்தான் மன்னன். இன்றும் அந்தக் கிராமம் பாகவதபுரம் என்ற பெயராலேயே வழங்கப் படுகின்றது.
Subscribe to:
Posts (Atom)