சேஷாத்ரி ஸ்வாமிகள்:
காஞ்சி நகரின் காமாட்சி அன்னையை ஆராதிப்பதற்காக ஆதி சங்கரர் சில உபாசனா முறைகளைத் தோற்றுவித்ததோடு அல்லாமல் அவற்றைச் சரிவர நடத்துவதற்காக, நர்மதா நதிக்கரையில் இருந்து தேவி உபாசகர்களான முப்பது பக்தர்களை அவர்களின் குடும்பத்தோடு காஞ்சிக்கு அழைத்து வந்தார். அவர்கள் ஶ்ரீ காமாட்சி தேவியைத் தங்கள் குலதெய்வமாகக் கொண்டு ஶ்ரீவித்யையைப் பரப்பி வந்தனர். அவர்கள் காலத்திலிருந்து தேவி பக்தியும், ஶ்ரீவித்யை உபாசனையும் செழித்து வளரத் தொடங்கியது. மக்கள் அவர்களைக் காமகோடியார் என அழைக்க ஆரம்பித்தனர். ஏனெனில் காஞ்சியின் காமாட்சி அம்மன் மட்டுமின்றி காஞ்சி நகரமே ஶ்ரீபராசக்தியின் ஶ்ரீசக்ரபீடத்தின் உருவாகவும் அம்மன் குடி கொண்டிருக்கும் காமகோடி பீடம் ஶ்ரீசக்கரத்தின் பிந்துவாகவும் கருதப்படுகிறது. அதை வழிபட்டு வந்த குலத்தவர்களைக் காமகோடியார் என்பது சரிதானே! இவர்கள் வேத அத்யயனம் செய்தவர்கள் மட்டுமல்லாமல், இதிகாசப் புராணங்களையும் நன்கறிந்தவர்கள். ஒரு சிலர் ஜோசிய சாத்திரத்திலும் வல்லவர்களாய் இருந்தனர். காமாட்சி கோயிலில் மட்டுமில்லாமல் ஶ்ரீவரதராஜர் கோயிலிலும் பஞ்சாங்கம் வாசிக்கும் உரிமையும், மான்யங்களும் பெற்றிருந்தனர்.
இந்தக் காமகோடியார் மரபில் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் காமகோடி சாஸ்திரிகள் என்ற பெயரில் ஒரு மகான் அவதரித்தார். ஆசாரசீலரான அவர் அம்பிகையின் வழிபாடு மட்டுமின்றி, ஈசனையும் துதித்துப் பல பாடல்கள வடமொழியிலும், தெலுங்கிலும் இயற்றி இருக்கிறார் அபாரமான சங்கீத ஞானம் உடைய இவர் கல்லும் கரையும் வண்ணம் பாடல்களைப் பாடிவருவார். இவர் வீடே ஒரு பர்ணசாலை போல் அமைதியும், எழிலும் நிறைந்து காணப்படும். அவர் சிலரின் வேண்டுகோளின்படி அருகிலுள்ள வழூர் என்னும் சிற்றூருக்குச் சென்று தங்கினார். ஆனால் அவருக்கு ஆண் குழந்தைப்பேறில்லாமல் மனம் வருந்தினார். ஒரே ஒரு மகளைப் பெற்றிருந்த அவர் தம் அண்ணனான சிதம்பர சாஸ்திரிகளின் இரு பெண் குழந்தைகளையும் தம் சொந்தப் பெண்களாகவே வளர்த்து வந்தார். அவர்கள் இருவரில் கடைக்குட்டியான மரகதம் சிறு வயதிலேயே அபார புலமையோடும், அழகும், நற்குணங்களும் வாய்க்கப் பெற்றிருந்தாள். சாஸ்திரிகளும் அவளுக்குப் புராணக்கதைகள், தர்ம சாத்திரங்களைக் கற்பித்ததோடு இசையோடு பாடவும் கற்றுத் தந்தார். நாளடைவில் தனது பனிரண்டாம் வயதிலேயே மரகதம், “சாகித்ய சங்கீத கலாநிதி” என்ற பட்டத்தப் பெற்றாள்.
அவளுக்குத் திருமணப்பருவம் வந்துவிட்டதை அறிந்த காமகோடி சாஸ்திரிகள் தக்கமணாளன் தனது மாணவனும், சீடனும் ஆன வரதராஜனே என முடிவு செய்து அவர் தந்தையோடு கலந்து பேசித் திருமணம் நிச்சயித்தார். ஒரு நல்ல முகூர்த்தத்தில் இருவருக்கும் திருமணம் செய்வித்தார். மரகதமும், வரதராஜனும் அருமையாகவும், பெருமையாகவும், சீரோடும், சிறப்போடும் தாம்பத்தியம் நடத்தி வந்தனர். இன்முகத்தோடு அனைவரையும் உபசரித்த தம்பதிகள் இருவரும் தர்ம நூல்களையும், புராணக்கதைகளையும் படித்து மகிழ்ந்ததோடு, மாலை வேளைகளில் வரதராஜப் பெருமாளையும், ஶ்ரீகாமாட்சி அன்னையையும் தரிசனம் செய்வதையும் வழக்கமாக வைத்திருந்தனர். எல்லாம் இருந்தும் இருவருக்கும் குழந்தைப்பேறே இல்லை. பல விரதங்கள் இருந்தனர். தானங்கள் செய்தனர். திருத்தல யாத்திரைகள் சென்றனர். காமகோடி சாஸ்திரிகளின் மனமும் வருந்தியது. காமாட்சி அன்னையிடம் சென்று அவள் சந்நிதியில் மனமுருகப் பிரார்த்தித்தார். தான் ஏதோ தவறு செய்திருந்தாலும் அதற்காகத் தன் அருமை மகளைத் தண்டிக்க வேண்டாம் என்றும் அம்பிகையின் கடைக்கண் கடாட்சத்தைக் காட்டி ஒரு குழந்தையைக் கொடுத்தருளும்படியும் வேண்டினார். அன்றிரவே காமகோடி சாஸ்திரியாரின் கனவில் அன்னை தோன்றி சாஸ்திரியாரைத் தம்பதிகளுக்கு வெண்ணெய் கொடுக்கும்படி கூறிவிட்டு அந்த வெண்ணெயை உண்ட தம்பதிகளுக்குச் சிறப்பான ஞானக்குழந்தை பிறக்கும் எனவும் கூறி மறைந்தாள்.
மறுநாள் காலை நீராடி அநுஷ்டானங்களை முடித்த காமகோடி சாஸ்திரியார் தம்பதிகளிடம் தாம் கண்ட கனவைக் கூறிவிட்டுப் பராசக்தியை வேண்டிக்கொண்டு, அவளுக்குப் படைத்த பிரசாதமாக வெண்ணெயை இருவருக்கும் கொடுத்தார். மந்திரங்கள், துதிகள், ஜபங்கள் செய்யப்பட்டுப் புனிதமடைந்திருந்த வெண்ணெயை இருவரும் உண்டனர். சில நாட்களில் மரகதம் கருத்தரித்தாள்.
Friday, November 25, 2011
Wednesday, November 16, 2011
வேண்டுகோள்
கொஞ்ச நாட்களுக்கு இந்தப் பக்கத்தில் பதிவிட இயலாது. குறிப்புப் புத்தகங்கள் எல்லாம் இந்தியாவில். சிரமத்துக்கு மன்னிக்கவும். இயன்றபோது நினைவில் இருப்பதை எழுதுகிறேன். நன்றி.
Saturday, August 20, 2011
ஜெய் ஆஞ்சநேயா! ஆஞ்சநேயப் பிரதாபம்!
சொல்லின் செல்வனான அனுமன் பேசி முடித்ததும் ராமர் அடைந்த மகிழ்ச்சியைப் பார்த்தோம். அதோடு இருவரும் ஏற்கெனவே ஒருவரை ஒருவர் சிறு வயதிலேயே அறிந்தவர்கள் எனவும் பார்த்தோம் அல்லவா? ஒருவருக்கென மற்றவர் பிறந்திருக்கிறார்கள். அதை இப்போதே அறிந்து கொள்ளவும் போகின்றனர். நடுவில் மாயை இருவரையும் சேர விடாமல் தடுத்தது எனலாமா? அல்லது சரியான நேரத்தில் தான் ராமனை அடையவேண்டும் என அனுமன் எண்ணியதாய்க் கொள்ளலாமா? எது எவ்வாறாயினும் அனுமனின் தூது நன்மையாகவே முடிந்தது. ராமரின் பேச்சைக்கேட்ட லக்ஷ்மணனும் மகிழ்வோடு அனுமனைப் பார்த்து, தாங்கள் இருவரும் சுக்ரீவனின் நட்பை நாடியே வந்திருப்பதாய்க் கூறினான். சுக்ரீவனின் ஆணையை ஏற்று எங்களைக் காண இங்கே வந்திருக்கும் அனுமனின் விருப்பம்போல் நடப்போம் என்றும் கூறினான். அனுமனுக்கோ மட்டில்லா மகிழ்ச்சி. ‘என் அரசனான சுக்ரீவனுக்கு அரசாட்சி மீண்டும் கிடைக்கும் நேரம் வந்துவிட்டது போலும். அதனாலேயே இவ்வளவு உயர்ந்த மனிதர்களின் நட்பு கிடைக்கிறது. ‘என்றெல்லாம் எண்ணி மகிழ்ந்த அனுமன் ராமரிடம் காட்டுக்கு வந்த காரணத்தை வினவினான்.
லக்ஷ்மணன் ராமரின் கதையை மீண்டும் ஒரு முறை அனுமனிடம் கூறுகிறான். ராமன் தகப்பன் சொல்லுக்காகப் பட்டத்தைத் துறந்ததில் இருந்து இப்போது ஸீதை அபகரிக்கப்பட்டது வரையிலும் அனைத்தையும் சொல்லி முடித்தான். ராமாயணத்தில் இவ்வாறு பலமுறை ராமாயணம் பலராலும் மீண்டும் மீண்டும் சொல்லப்படும். பின்னர் சுக்ரீவனைப் பற்றிக் கபந்தன் என்னும் கந்தர்வன் சொன்ன விஷயங்களைக் கூறிய லக்ஷ்மணன் அவன் சொன்னதாலேயே சுக்ரீவனை நாடி தாங்கள் வந்திருப்பதாயும், உலகத்தைப் பாதுகாக்கும் வல்லமை படைத்த ராமன் இப்போது சுக்ரீவனின் உதவியை நாடி அவனிடம் அடைக்கலம் நாடி வந்திருப்பதைக் கூறுகிறான். மனைவியை இழந்து ஆழ்ந்த துக்கத்தில் மூழ்கி இருக்கும் ராமருக்கு வேண்டிய உதவிகளை சுக்ரீவன் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறான். அவ்வளவில் அனுமன் அவர்களைச் சந்திக்க நேர்ந்தது தங்கள் அதிர்ஷ்டம் எனவும், வாலியினால் துன்புற்று மனைவியை இழந்து, ராஜ்யத்தையும் இழந்து ஒவ்வொரு இடமாக அலையும்சுக்ரீவனுக்கு உங்கள் உதவி தேவைப்படும். எனக்கூறிவிட்டு அவர்களைத் தன் தோளில் சுமந்த வண்ணம் சுக்ரீவன் இருக்குமிடம் நோக்கிச் சென்றான் அனுமன்.
சுக்ரீவனிடம் ராமரின் பெருமையை எடுத்துக்கூறி அத்தகைய பெருமை வாய்ந்த ராமர் இப்போது சுக்ரீவனின் உதவியை நாடி வந்திருப்பதையும் கூறுகிறான். சுக்ரீவனோ தர்மத்தின் பாதையில் இருந்து தவறாத ஸ்ரீராமர் தன் நட்பை நாடி வந்திருப்பது தனக்குச் செய்த கெளரவம் எனக் கூறி விட்டுத் தன் கையை நீட்டி ராமரைப் பிடிக்கச் சொல்லி தனது நட்பை ராமருடன் உறுதி செய்து கொள்கிறான். ராமரும் அவ்வாறே சுக்ரீவனின் கையை இறுகப் பற்ற அனுமன் அக்னியை மூட்ட, இருவரும் அக்னியை வலம் வந்து வணங்கி, இனித் தங்கள் இன்பம், துன்பம் அனைத்தும் ஒன்றே எனக்கூறி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
இதைக்கம்பர் கூறுகையில்
"மற்று இனி உரைப்பது என்னே வானிடை மண்ணில் நின்னைச்
செற்றவர் என்னைச் செற்றார் தீயேரே எனினும் உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார் உன் கிளை எனது என் காதல்
சுற்றம் உன் சுற்றம் நீ என் இன் உயிர்த்துணைவன் என்றான்.
என்று கூறுகிறார்.

Wednesday, July 27, 2011
ஜெய் ஆஞ்சநேயா! ஆஞ்சநேயப் பிரதாபம்!
கிஷ்கிந்தையை சுக்ரீவன் ஆண்ட சமயத்தில் தான் அநுமன் சூரியனின் வேண்டுகோளின்படியும் அவனுக்குத் தான் அளிக்கவிருந்த குருதக்ஷிணைக்காகவும் சுக்ரீவனிடம் மந்திரியாக வந்து சேர்ந்தான். அவனுக்கு உண்மையாக சேவை செய்தும் வந்தான். ஆகவே வாலி மீண்டும் திரும்ப வந்து சுக்ரீவனை நாட்டை விட்டு விரட்டியபோது அவனுடன் அநுமனும், ஜாம்பவான் என்னும் கரடித் தலைவனும், சுக்ரீவனின் பிள்ளை அங்கதனும் சேர்ந்தே வந்திருந்தார்கள். இங்கே ரிஸ்யமூக பர்வதத்தை வந்தடைந்து அங்கே ஒளிந்திருந்தார்கள். அந்தச் சமயத்தில் தான் ஸ்ரீராமரும், லக்ஷ்மணனும் சீதை சென்ற திக்கு நோக்கிப் பிரயாணித்து வந்து சேர்ந்தனர். பம்பை நதிக்கரைக்கு வந்த ஸ்ரீராம, லக்ஷ்மணர்கள் ஏற்கெனவே சுக்ரீவனைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்ததால் அவனைத் தேடி நடந்தார்கள். மலையின் உச்சியில் இருந்து அவர்கள் இருவரையும் கண்ட சுக்ரீவனோ வாலியால் அனுப்பப் பட்டவர்களோ என எண்ணி அஞ்சினான். சந்தேகத்தோடு அவன் தன் நண்பர்களைக்கலந்து ஆலோசிக்க அவர்களில் அனுமன், “வாலியையே நினைத்துக் கவலைப்படுவதை விட்டொழியுங்கள். இவர்கள் யாரோ, எவரோ, அறிய மாட்டோம். இந்த மலையில் வாலியைப் பற்றிய கவலையை விட்டொழியுங்கள். ஓர் அரசனான நீர் அதை மறந்து ஒரு சாதாரண வானரமாக சஞ்சலம் அடைதல் உமக்குத் தகுதியானதன்று. இப்போது அடுத்துச் செய்ய வேண்டியது என்ன என்பதை ஆலோசிக்கலாம்.” என்று கூறினான். ஒரு மந்திரி மன்னனிடம் தக்க நேரத்தில் கூற வேண்டிய ஆலோசனையைக் கூறியதன் மூலம் தன்னுடைய தகுதியை நிரூபித்தான் ஆஞ்சநேயன்.
ஆனாலும்சுக்ரீவனோ, “மாறுவேடத்தில் ஒற்றர்களை அனுப்பி நம்மை வேவு பார்த்து வரச் சொல்லி இருப்பான் வாலி. எதற்கும் நாம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லதுதானே. அநுமனே, நீ சென்று அவர்கள் யார், எவர், எங்கிருந்து வருகிறார்கள், அவர்கள் நோக்கம் என்ன என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டு வா. இந்தக் காட்டை நோக்கி அவர்கள் ஏன் பயணப்பட்டார்கள் என்பதையும் கேட்டு அறிந்து வா.” என்று அநுமனை அனுப்பி வைத்தான். அநுமனும் தன் சுய உருவை மறைத்துக்கொண்டு ஒரு சந்நியாசியாக மாறினான். ராம, லக்ஷ்மணர்கள் இருக்குமிடம் சென்று அவர்களை வணங்கி, “இந்தக் காட்டில் அங்குமிங்கும் அலைந்து யாரை அல்லது எதைத் தேடுகிறீர்கள்? உங்களைப் பார்த்தால் அரசர்கள் போலவும், அரசகுமாரர்கள் போலவும் காண்கிறீர்கள். ஆனால் ரிஷிகளுக்குரிய மரவுரி தரித்துள்ளீர்கள். நீங்கள் யார்?? ராஜரிஷிகளா? அல்லது விண்ணிலிருந்து பூமிக்கு வந்த தேவர்களில் இருவரா? இங்கு என்ன காரியமாக வந்திருக்கிறீர்கள்?” என்று விநயமாக வினவினான்.
மேலும், “ரிஷிகள்போன்ற உடைகளை அணிந்திருந்தாலும் கூடவே போர்க்கோலமும் பூண்டிருக்கின்றீர்களே? உங்கள் இருவரது உடைவாட்களும்நீண்டு இப்போதுதான் தீட்டப்பட்டது போல் மின்னுகின்றன. வில்லை ஏந்தி வந்திருக்கும் வில்லாளிகளான உங்கள் அம்புறாத்தூணிகளோ கூர்மையான அம்புகளால் நிறைந்துள்ளன. இங்கு எவருக்கேனும் பாதுகாப்புக் கொடுக்க வந்துள்ளீர்களா? ஏன் ஒன்றுமே பதில் கொடுக்காமல் பேசாமல் இருக்கிறீர்கள்?” என்று வினவினான். சற்று யோசனை செய்த அனுமன் மேலும் பேசுவான்: வானரங்களின் நிகரற்ற தலைவனும், தர்மத்தைக் கடைப்பிடிப்பவனுமான சுக்ரீவன் என்னும் வானரத் தலைவனே என் அரசன். அவன் அண்ணனான வாலி என்பவனால் நாடு கடத்தப்பட்டு ஒவ்வொரு இடமாக அலைந்து கொண்டிருக்கும் சுக்ரீவனின் முக்கிய மந்திரி நான். இந்த ரிஷ்யமூக பர்வதத்திற்குள் வாலி நுழைய முடியாது என்பதால் சுக்ரீவன் தற்சமயம் இங்கே தங்கி உள்ளார். நானும் ஒரு வானரனே. என் பெயர் அனுமன். சுக்ரீவன் உம்மோடு தனது நட்பை விரும்புகிறார். அந்த நட்பை உறுதி செய்ய வேண்டி என்னை இங்கே அனுப்பி வைத்துள்ளார். நான் இப்போது வந்திருக்கும் இந்த சந்நியாசிக்கோலம் நான் வேண்டி எடுத்துக்கொண்டிருப்பது ஆகும். நினைத்த நேரம், நினைத்த உருவை எடுக்கும் வல்லமை பெற்றவர்கள் நாங்கள். ஆகவே என்னை சுக்ரீவனின் அமைச்சனாக அறிந்து கொண்டு என்னை உங்கள் நண்பனாக ஏற்றுக்கொண்டு என் தலைவரையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.”
சொல்லின் செல்வனான அனுமனின் பேச்சைக் கேட்ட ஸ்ரீராமர் முகமலர்ச்சியுடன் லக்ஷ்மணனைப்பார்த்து, " நாம் தேடிவந்த சுக்ரீவனின் அமைச்சன் ஆன இவன் நம்பிக்கைக்கு உரியவனாய்த் தெரிகின்றான். மேலும் இவனுடைய இந்தப் பேச்சுக்களில் இருந்து இவன் அனைத்து சாத்திரங்களையும் கற்றுத் தேர்ந்தவன் என்று புரிகிறது. இவன் நடத்தையிலோ, சொற்களிலோ காணப்படும் தெளிவில் இருந்து இவன் மிக உயர்ந்த எண்ணங்களைக் கொண்டவன் என்பதும், அருமையான ஒரு தூதுவனாகப் பரிமளிக்கிறான் என்பதும் புலனாகிறது. இவனைப் போன்ற ஒருவனை மந்திரியாகப் பெற்ற அந்த சுக்ரீவனின் காரியம் எவ்வாறேனும் கைகூடும். ஆகவே நமக்கும் நாம் வந்த காரியம் வெற்றியடையும் என்று தோன்றுகிறது.” என்றார்.

Sunday, May 1, 2011
ஜெய் ஆஞ்சநேயா! வாலி, சுக்ரீவன்!
சற்று நேரத்தில் வாலியின் குரலைப் போல் ஓர் குரலும் கேட்டதும், அதைத் தொடர்ந்து அந்த அசுரனின் அசுர கர்ஜனையும் கேட்டதும். உடனே வெளியே நின்ற சுக்ரீவன் வாலி இறந்துவிட்டான்; அசுரன் அவனைக் கொன்றுவிட்டான் என்ற ஓர் முடிவுக்கு வந்தான். ஆகையால் அசுரன் வெளியே வராதபடிக்குப் பாறையைத் தள்ளிக் குகையின் வாயிலை அடைத்தான். பின்னர் வாலிக்கு நீத்தார் கடன்களை முறைப்படி செய்தான்; அங்கிருந்து கிளம்பி கிஷ்கிந்தை வந்து நாடு மக்களிடமும், மந்திரி, பிரதானிகளிடமும் நடந்ததை சொன்னான். அவனுடைய முயற்சிகளையும் என்ன நடந்தது என்பதை சுக்ரீவனை வற்புறுத்தியும் கேட்டுத் தெரிந்து கொண்ட மந்திரிகள் ஆலோசனைகள் பலவும் செய்து சுக்ரீவனுக்கு முடி சூட்டினார்கள். சுக்ரீவன் ஆட்சி புரிந்து கொண்டிருந்த காலத்தில் வாலி திடீரெனத் திரும்பி வந்தான். தன்னுடைய சிம்மாதனத்தில் தம்பி ஏறி அமர்ந்து ஆட்சி நடத்துவதையும், தன்னுடைய மந்திரி, பிரதானிகள் அதற்கு ஒத்திசைத்ததையும் பார்த்துக் கோபம் கொண்டான். அமைச்சர்களைச் சிறையில் தள்ளினான். சுக்ரீவன் அண்ணனைக் கண்டதும் உண்மையிலேயே மகிழ்ந்து தன் அரச கிரீடத்தைக் கழற்றி அண்ணன் காலடியில் சமர்ப்பித்து, “அண்ணா, உங்களால் மாயாவியான துந்துபி கொல்லப் பட்டது கண்டு மகிழ்ந்தேன். நாட்டுமக்களுக்கு நன்மை செய்தீர்கள். நீங்கள் வராத காலத்தில் உங்களுக்குப் பதிலாக நாட்டை நான் ஆண்டேன். இனி நீரே எமக்குத் தலைவர். ஒருவருட காலம் அந்தக் குகையின் வாயிலில் பள்ளத்தில் காத்திருந்த நான் பெருகி வந்த ரத்த வெள்ளத்தைக் கண்டு நீங்களே இறந்துவிட்டதாய்த் தவறான முடிவுக்கு வந்துவிட்டேன். ஆகையால் பள்ளத்தை மூடிவிட்டுக் கிஷ்கிந்தை வந்தேன்; இங்கே நான் மந்திரி, பிரதானிகளிடம் நடந்த எதையும் கூறவில்லை. பட்டம் சூட்டிக்கொண்டு அரசாள விருப்பமும் தெரிவிக்க வில்லை. மக்களும், மந்திரிகளுமே ராஜ்யம் அரசனில்லாமல் இருத்தல் கூடாது என்பதால் எனக்கு முடி சூட்டினார்கள்.”
“ஆனால் இப்போது நீங்கள் வந்துவிட்டீர்கள். நான் செய்தது தவறெனில் மன்னிக்கவும். நீங்கள் இல்லாத நேரத்தில் முறையாகவே ஆண்டு உங்கள் நாட்டைக் காத்து வந்திருக்கிறேன். அதை இப்போது உம்மிடம் ஒப்படைக்கிறேன். கோபம் கொள்ளாதீர்கள்.” என்று தயவாகக் கூறித் தன் நாட்டையும், கிரீடத்தையும் வாலியிடம் ஒப்படைத்தான். ஆனால் வாலிக்கோ கோபம் அடங்கவே இல்லை. மிகவும் கொடுமையான வார்த்தைகளால் சுக்ரீவனைத் திட்டினான். மற்றவர்களைப் பார்த்து, “கொடியவனான மாயாவி துந்துபி என்னை சண்டைக்கு அழைத்தபோது வேறு வழியில்லாமல் நான் போனேன். இதோ, இந்த என் தம்பி சுக்ரீவனும் உடன் வந்தான். அந்த மாயாவி ஒரு பள்ளத்தினுள் மறைந்தான். அவனைக் கொல்லாமல் திரும்பக் கூடாது என்பதால் நானும் அந்தப் பள்ளத்தினுள் புகுந்தேன். இவனை வெளியே காவல்தான் இருக்கச் சொல்லி இருந்தேன். அங்கே அவனைத் தேடிக் கொல்ல எனக்கு ஒரு வருடமாயிற்று. என்னால் கொல்லப் பட்ட அவன் கக்கிய ரத்தத்தால் அந்தப் பள்ளம் நிரம்பி ரத்தம் வெளியே ஓடி வரலாயிற்று. நான் பள்ளத்திலிருந்து வெளியே வர முயற்சித்த போது இந்த என் தம்பி பள்ளத்தை மூடிவிட்டிருந்தான். என்னால் வர இயலவில்லை. சுக்ரீவா, சுக்ரீவா, எனப் பல முறை கூவிக் கூவி அழைத்துப் பார்த்தேன். பதிலே இல்லை.”
“அதன் பின்னர் மிகச் சிரமப் பட்டுக் காலினாலும், வாலினாலும் பள்ளத்தை மூடியிருந்த பாறையை நகர்த்தியும், மெள்ள மெள்ள நொறுக்கியும் பள்ளத்திலிருந்து வெளியே வந்தேன். வந்தால், இந்தக் கொடியவன் என் நாட்டை என்னிடமிருந்து அபகரித்திருக்கிறான். அண்ணன் என்ற அன்பைக் காட்டாமல் என் நாட்டை அபகரிக்க வேண்டி வஞ்சகமாய்ச் சூழ்ச்சிகள் செய்திருக்கிறான். இவனுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகும்.” இவ்வாறு கூறிய வாலி அணிய மாற்றுத் துணி கூட இல்லாமல் சுக்ரீவனை அந்தக் கணமே நாட்டை விட்டுத் துரத்தினான். தன் மனைவியைத் தன்னுடன் அழைத்துச் செல்ல எண்ணிய சுக்ரீவனிடமிருந்து அவன் மனைவியையும் பறித்துக் கொண்டான். வாலியிடமிருந்த பயத்தால் எங்கேயுமே தங்க இயலாமல் தவித்த சுக்ரீவன் கடைசியில் ரிஷ்யமுக பர்வதத்தினுள் வாலி நுழையத் தடை என்பதை அறிந்து அங்கே வந்து தங்கினான். ஆனால் வாலியின் தொல்லைகள் அவனுக்குக் குறையவே இல்லை.
Wednesday, April 13, 2011
ஜெய் ஆஞ்சநேயா, ஆஞ்சநேயப் பிரபாவம், வாலி, சுக்ரீவர்கள்!
வால்மீகியின் ராமாயணத்திலே இந்த வாநரர்கள் பற்றிய வர்ணனையைப்பார்த்தால் அவர்கள் சாதாரணக் குரங்கினம் அல்ல என்பது நன்கு புலனாகும். அப்படி ஒரு வாநரன் ஆன அநுமனின் வீரதீரம் பற்றியே பார்க்கிறோம். அந்த அநுமன் எப்படிக் கிஷ்கிந்தை வந்து சேர்ந்தான் என்பதையும் பார்த்தோம். தன்னுடைய அம்சத்தின் மூலம் பிறந்த தன் மகன் ஆன சுக்ரீவனுக்குத் தக்க துணையாக அநுமன் இருப்பான் என நம்பியே அவனை சுக்ரீவன் இருக்குமிடம் அனுப்புகிறான் சூரியன். இதுவே அநுமன் தனக்குத் தரும் குரு தக்ஷிணை எனவும் கூறுகிறான் அல்லவா? சுக்ரீவனுக்கு அப்படி என்ன கஷ்டம் நேர்ந்தது என்று பார்க்கும் முன்னர் வாலியைப் பற்றித் தெரிந்து கொள்வோம். அருணி என்னும் வாநர ஸ்த்ரீக்குப் பிறந்த வாலியும், சுக்ரீவனும் ரிக்ஷரஜஸ் என்னும் வாநர அரசனால் வளர்க்கப் பட்டனர். மூத்தவன் ஆன வாலிக்குப் பட்டம் கட்டினான் ரிக்ஷரஜஸ். சுக்ரீவன் அவனுக்கு இளையவன் ஆதலால் அண்ணனுடன் கூட உதவிகள் செய்து கொண்டு வந்தான். வாநரர்களின் அரண்மனைகள் கூட பிரமிப்பூட்டும்படியாக அமைந்திருந்ததாக வால்மீகி வர்ணிக்கிறார். அழகான வாநரப் பெண்கள் இருந்ததோடு அற்புதமான ஆடை ஆபரணங்கள் பூண்டும் இருந்திருக்கின்றனர். நடத்தை, அறிவு, பழக்க வழக்கம் போன்றவற்றில் மனிதர்களை ஒத்திருந்தாலும் உணர்ச்சி வசப்பட்டு கோபத்திலோ, மகிழ்ச்சியிலோ அறிவை இழப்பவர்களாக இருந்தனர். ஆகவே இவர்களை வெறும் வாநரங்களாக நினக்காமல் மேலே படிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.
வாலி மிகுந்த புத்திசாலியாகவும் திறமை உள்ளவனாகவும் இருந்ததோடு வீரனாகவும் இருந்தான். அவனுக்கும் மாயாவி என்னும் ஒரு அரக்கனுக்கும் ஒரு பெண்ணின் காரணமாகச் சண்டை மூண்டது. மாயாவி ஒரு நாள் நள்ளிரவில் கிஷ்கிந்தை வந்து வாலியைச் சண்டைக்கு அழைத்தான். வாலியும் உடனே சண்டைக்குப் போனான். அவன் மனைவிமார்களும், சுக்ரீவனும் எவ்வளவோ முயற்சி எடுத்துத் தடுத்துப் பார்த்தார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. வாலியை அவர்களால் தடுக்க முடியவில்லை. வாலியின் பலம் அசாத்தியமானது. அனைவரையும் உதறித் தள்ளிவிட்டு விட்டு மாயவியுடன் சண்டைக்குப் போனான் வாலி.
உக்கிரமாகச் சண்டை நடக்கப்போகிறது என்ற கவலையோடு சுக்ரீவன் அண்ணனைத் தொடர்ந்தான். அண்ணனும், தம்பியும் வருவதைக் கண்ட மாயாவியோ ஓட்டமாக ஓடினான். வாலி தொடர்ந்தான். பின்னாலேயே சுக்ரீவனும் தொடர, அந்த அசுரன் பூமிக்குள் இருந்த ஒரு பெரும் பள்ளத்தில் இறங்க, வாலியும் இறங்க யத்தனித்தான். சுக்ரீவன் தடுக்க, வாலி விடாப்பிடியாக, " நான் உள்ளே இறங்கிச் சென்று அவனைக் கொன்றுவிட்டுத் திரும்பி வருகிறேன். நீ இங்கே காவலுக்கு இருப்பாயாக." என்று கூறி சுக்ரீவனைக் காவலுக்கு வைத்துவிட்டுப் பள்ளத்தில் இறங்கி மறைந்து போனான். வாலி உள்ளே நுழைந்ததுமே மறைந்திருந்ஹ மாயாவி பள்ளத்தையும் மூடிவிடவே, சுக்ரீவனுக்குக் கலக்கம் ஆரம்பமாயிற்று. அப்படியும் ஒரு வருஷத்துக்கும் மேல் அங்கேயே சுக்ரீவன் காத்திருந்தான். வாலி என்ன ஆனான் என்றே தெரியவில்லை. அப்போது அந்தப் பள்ளத்திலிருந்து ஓர் அசுர கர்ஜனை கேட்க, ரத்தமும் பிரவாகமாகப் பொங்கிக்கொண்டு வெளிவரலாயிற்று.

Thursday, February 24, 2011
ஜெய் ஆஞ்சநேயா! ஆஞ்சநேயப் பிரதாபம்!
அநுமன் தன் வித்தைகளை சூரியனின் மூலம் நன்கு கற்றுத் தேர்ந்ததோடு அல்லாமல் மாபெரும் பண்டிதனாகவும் ஆனான். சூரியன் செல்லும் திசையெல்லாம் கூடவே சென்று ஒரு காலைக் கிழக்கேயும், மற்றொரு காலை மேற்கேயும் வைத்துக்கொண்டு தன்னுடைய பிரயாணத்துக்கு இடையூறு நேராவண்ணம் கற்ற இந்த அதிசய மாணாக்கனின் திறமையைக் கண்டு சூரியனும் மகிழ்வும், பெருமையும் கொண்டான். சூரியன் முன்னேற முன்னேற அநுமன் அவனைப் பாரத்தவண்ணமே பின்னே பின்னே சென்று அனைத்தையும் கற்றுத் தேர்ந்தான்.
மேலும் இசையிலும் மிகச் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றான் அநுமன். முதலில் ஒரு வானரமான உனக்கெல்லாம் இசையைப் பற்றி என்ன தெரியும் என அனுமனைப் பார்த்துக் கேலி செய்த நாரதரே வியக்கும் வண்ணம் அநுமன் வீணை இசைத்தால் கல்லான மலையே உருகும் வண்ணம் அவன் இசைத் திறனும் அமைந்தது. இப்போது குருகுலவாசம் முடிந்து விடைபெறும் நாள் வந்துவிட்டது. குரு தக்ஷிணை கொடுக்கவேண்டும்.குரு தக்ஷிணையாக எதைத் தருவது என்று சூரியனிடமே கேட்டான் அநுமன். சூரியனோ இப்படி ஒரு அர்ப்பணிப்பு உணர்வோடும் குரு பக்தியும் நிறைந்த சீடனுக்குக் கற்றுக்கொடுத்ததே தனக்குக் கிடைத்த மாபெரும் தக்ஷிணை என மறுத்தான். ஆனால் அநுமன் சமாதானம் அடையவில்லை. வெகு நேரம் யோசித்த சூரியன் தன்னுடைய மானஸ புத்திரன் ஆன சுக்ரீவனுக்கு கிஷ்கிந்தை சென்று உதவிகள் செய்யுமாறும், ஆலோசனைகள் கூறுமாறும் அநுமனிடம் கேட்க அநுமனும் அதற்கு ஒத்துக்கொண்டு கிஷ்கிந்தை நோக்கிப் பிரயாணமாகிறான். இவ்வளவு படித்தும்,, இத்தனை வித்தைகள் கற்றுக்கொண்டும் அநுமனுக்கு அவை எதுவும் நினைவில் இல்லாதவாறு தன் பலம் தனக்கே தெரியாதவாறு ஒரு சாபம் இருந்து கொண்டிருந்தது. சின்ன வயதுக் குறும்போடு அநுமன் காட்டில் தவம் செய்து கொண்டிருக்கும் ரிஷிகளை தவத்தைத் கலைத்து விளையாட, கோபம் கொண்ட ரிஷிகள் அனைவரும் சேர்ந்து அநுமனின் இந்தச் செயலைத் தடுக்க நினைத்தனர். அவன் அதீத பலம் அவர்களுக்குத் தயக்கத்தை அளித்தது. அப்போது முக்காலமும் உணர்ந்த ஞாநியான அகத்தியர் தாம் இதற்கு ஒரு முடிவு கட்டுவதாய்க் கூறினார். ஒரு நாள் தங்கள் வழிபாட்டுக்கு வேண்டிய மலர்கள், கனிகளைப் பறித்து வரும்படி அநுமனிடம் கூற அவனோ மலர்ச்செடிகளையும், கொடிகளையும், பழமரங்களையும் வேரோடு கொண்டுவந்துவிட்டான். இது தான் சமயம் என்று நினைத்த அகத்தியர்அநுமனுக்கு அவன் கற்ற வித்தைகள் மறந்து போகக்கடவது என்று சாபம் கொடுத்தார். என்றாலும் அநுமன் அவதரித்த முக்கிய காரியம் பூர்த்தி அடையவேண்டும் என்பதையும் மனதில் எண்ணி ராமகாரியத்திற்காக அநுமன் பிறப்பெடுத்ததைக் கூறி சாபத்தைத் திரும்ப வாங்கச் சொல்ல, இட்ட சாபம் திரும்ப வாங்க இயலாது என்பதால் சாபத்தை அநுமன் அநுபவித்தே ஆகவேண்டும் எனவும், சரியான நேரம் வருகையில் ஒரு மூத்த வயோதிகரால் அவர் பலம் அவருக்கு எடுத்துச் சொல்லப் படும் எனவும் விமோசனமும் கொடுத்தார். அவ்வளவிலேயே அநுமன் கிஷ்கிந்தை நோக்கி வருகிறான்.
இங்கே கிஷ்கிந்தையிலே வாலிக்கும், சுக்ரீவனுக்கும் இடையிலே கருத்து வேறுபாடுகள், சண்டை, சச்சரவுகள். வாலியின் பலம் மிக அளவிடமுடியாமல் இருந்தது. அந்த பலத்தை வைத்து அவன் அனைவரையும் வென்றான். கிஷ்கிந்தையை ஆண்டு வந்தான். அவன் மனைவி தாரை இருக்கையிலேயே தம்பி மனைவியான ருமையையும் பலவந்தம் செய்தான். தடுத்துக் கேட்ட சுக்ரீவனை மதிக்கவில்லை. அவனைக் கண்டு லங்காபுரி அரசன் ஆன ராவணனும் பயந்தான். அவனோடு சமரசம் செய்து கொண்டு சமாதானமாகப் போகவே நினைத்து அப்படியே வாலியைத் தனது நண்பனாகவும் ஆக்கிக்கொண்டான். அப்படிப் பட்ட வாலியின் கதை அடுத்துப் பார்க்கலாம்.
Subscribe to:
Posts (Atom)